top of page

ஒரம் கட்டபட்ட தலைவர்கள்! சவால் விடும் ராமதாஸ்!சாதிவாரி கணக்கெடுப்பு! பாஜக, விடம் கேட்க தயங்குவது ஏன்? அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அதிரடி கேள்வி!

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

Updated: Dec 26, 2024

ச.ராஜா மரியதிரவியம் .....

தோகமலை .......


மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி?.

இட ஒதுக்கீடு இன்னமும்

பெற முடியாமல் பாமக வலுப்பெற்றுள்ள பகுதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பூர்வ ஆதிகுடிகளாக மதம்மாறிய துரும்பர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சமூக இன மக்களின் நிலை பற்றி பேச தயங்குவது ஏன் சமூக நீதி ஆர்வலர்கள கேள்வி?


அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனியார் யூடியூப் ஒன்றுக்கு அவர் நேற்று டிச 25. அளித்த பேட்டியின் போது நெறியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

'ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களையும் பகடைக்காயாக பயன்படுத்தி , தங்களின் கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் ராமதாசும், அன்புமணி ராமதாசும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்.

இப்போது மறுபடியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை அரசியல் சூதில் பணயம் வைத்து, தனது அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி என்றும் இனி ஏமாறப்போவதில்லை என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மக்கள் அவர்கள் முகத்தில் அடித்தாற்போல் தேர்தலில் நிருபித்து விட்டனர்.

எங்களது பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனைக் குறிப்பிட்டு, வன்னியர் சமூக மக்கள் மீது தங்களுக்குப் பாசம் உள்ளது போல நீலிக்கண்ணீர் வடித்து நடித்திருக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் 2.ம். இடத்திலும், கழகத்தின் பொதுச் செயலாளராக, தலைவருக்கு அடுத்த இடத்திலும் துரை - முருகன் தான் உள்ளார். 4 பேர் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இவற்றையெல்லாம் லாபமாக மூடிமறைத்து விட்டு அரசியலுக்காக துடித்து துடித்து இல்லாதை ஒன்றை இருப்பதை போல காட்ட முயற்சி பேசி வருகிறார்கள்.


தலித் எழில் மலை, பொன்னுசாமி என ஒன்றிய அமைச்சர் பதவிகளில் தலித் மக்கள் பிரதிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்ததாக கூறும் ராமதாஸ், அப்போதுதனது மகன் அன்பு மணி எம்.பி. யாகயில்லை என்பதை ஏனோ மறந்து விட்டாரா? இன்று ராமதாஸ். கூட்டணிக் கட்சியிடம் பிளஸ் 1 என்ற மாநிலங்களவை சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பதும். ஒன்றிய அமைச்சர் பதவி என்றாலும் அதனையும் தன் மகன் அன்புமணிக்குத்தான் வாங்கிக் கொடுப்பார் என்பது ஏன்? கட்சியின் தலைவராகயிருந்த ஜி.கே.மணியையும் எடுத்து விட்டு, மேடையில் தனது குடும்பத்துடன் இருந்தால் விமர்சனம் வரும் என அஞ்சி, மேட்டூரை விட்டு வர மாட்டார் என தெரிந்து பெயருக்கு கெளரவ தலைவர் பதவி கொடுத்துள்ளார்.

இதுதான் ராமதாஸ் வன்னியர் மக்களின் மீதான பாசமா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?


பாமகவிற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி. புத அருள்மொழி, புகழேந்தி காடுவெட்டி குரு போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸை அடுத்த தலைவராக்கியது எதனால்? தலைவர் பதவியில் இருந்த தீரன் எங்கே போனார்? ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக பிடுங்கி அன்புமணிக்கு கொடுத்தார்கள்? பாமக வில் வேறுவருமே அன்புமணி அளவிற்கு உழைக்கவில்லையா? என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? பாமகவிற்காக உழைத்து ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவைக் கூட இறுதி காலத்தில் கைவிட்ட உங்களுக்கு வன்னியர் பாசம் பற்றி எல்லாம் பேச அவர்களுக்கு தார்மீக உரிமை உண்டா? அவரது குடும்பத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை பற்றி கூட அக்கரையோ கவலையோ யில்லாதவர்கள்தான் இவர்கள்

10.5. இட ஒதுக்கீடு என்பது, நடை முறையில் வடமாவட்டங்களில் 20ல், 16 சதவிகிதம் வரை கூட இட பகிர்வு மூலம் வன்னியர்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்ற உண்மை நிலையை தரவுகளுடன் சட்டமன்றத்தில் எவருடைய தூண்டுதலும் இல்லாமல், நானே திரும்ப, திரும்ப, ஜி.கே.மணி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து கூறினேன். எனது பேச்சையும் மடை மாற்றம் செய்கிறார்கள். அதே சமயம் மாற்று சமூகத்தினர் இதே பதிலை கூறியிருந்தால் தரம் தாழ்ந்து விமர்சிக்க வும் அஞ்சமாட்டார்கள் என்பதால் தான், சட்டபேரவையில் நானே விளக்க முட ன்பதில் கூறினேன்.


வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் தி.மு.க முகத்தை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக எதிர்த்து கேள்வி கேட்பாரா? இல்லை கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா? பொய்க்கால் குதிரை ஓட்டி நானும் வன்னிய மக்களை காக்கும் ராஜாதான் என வாய் வேடம் போட்டால் எவ்வளவு காலத்துக்கு வன்னிய மக்கள் இவர்களைநம்புவார்கள்?

பழனிசாமி தலைமையிலான அதிமுகவோடு தேர்தல் கூட்டு சேர அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலாமாக 10.5% இட ஒதுக்கீடு என்ற ஏமாற்று அறிவிப்பை அறிவித்தார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்புதானே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைத்தும் அறிந்ததாய் சொல்லிக்கொள்ளும் ராமதாஸுக்கு அப்போது இதன் உண்மை நிலை தெரியாதா? அந்த இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படும் என்று? தெரியும். தெரிந்தேதான் நம்பவைத்து தேர்தலுக்காக மக்களை ஏமாற்றினார் ராமதாஸ். இப்போதும் இடஒதுக்கீட்டினையே அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசோடு அரசியல் ஆதாயத்திற்காக கைகோத்துக் கொண்டு நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்!சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்லாது வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பையே எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள பாஜகவை ஆதரித்து அவர்களோடு கூட்டணியில் இருக்கும் அன்புமணி, தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசி வருவது அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.


மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசு மேற்கொள்வது. அதைத்தான் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாக நீதிமன்றங்களோ ஒன்றிய அரசு அமைப்புகளோ அங்கீகரிக்கும், ஆனால் மாநில அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது அது வெறுமனே கணக்கெடுப்பாக இருக்குமே தவிர அதனால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் பிஹாரில் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டினை, நீதிமன்றம் நிராகரித்துவிட்டதை எல்லாம் இவர்கள் அரசியல் செய்வதற்காக வசதியாக மறந்துவிட்டு அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார்.

1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினை ஏற்படுத்தி, 115 மிகவும் பின்தங்கிய சமூக மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறி வாழ்வில் ஏற்றம் பெற காரணமாக இருந்தார். இதன் வாயிலாகத்தான் வன்னியர்கள் மிகுந்துள்ள வடமாவட்டங்களில் இன்றும் இம்மக்கள் பயன் பெற்று வருகின்றார்கள்.


அவசரகதியில் அரசியலுக்காக எதுவும் செய்யாமல் ஆழ்ந்து ஆலோசித்து உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை கொண்டு எந்த நீதிமன்றமும் நிராகரித்துவிடாதபடி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை செயல்படுத்திக் காட்டினார். தலைவர் கலைஞர்.


தமிழ்நாடு முதல்வராக தளபதி மு. க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பே

ற்ற உடனே கடந்த 1987 அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு போராடியதற்காக சுட்டுக்கொல்லப்பட்ட இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படியே மணிமண்டபம் அமைக்கபட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியும் வருகிறார் முதல்வர். இதனை கண்டு அஞ்சி ஏதே ஏதே பேசி வருகின்


அன்புமணிக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏற்கனவே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்கு செல்லும் வன்னிய சமூக மாணவர்களின் எண்ணிக்கை நீங்கள் கூறும்10.5% விட அதிகம். தற்போது 10.5%-ஐ அமல்படுத்துவதன் மூலம் மேற்படிப்பில் சேரும் வன்னியர் சமூக மாணவர்கள் எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏதே ஏதே பேசி கொண்டிருந்தவர்கள், இப்போது ஆசிரியராகயிருந்த ஜி.கே.மணியின் பெயராலும், தனி மனித, வன்ம அவதூரு அறிக்கைகள் விடுத்தும் வருகின்றார்கள்.


ஆனால் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுசெய்யும் அரசல்ல இந்த திராவிட மாடல் அரசு. எதைச் செய்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணமும், அது யாராலும் நிராகரிக்க முடியாதவண்ணமும் அமைய வேண்டும் என்ற வகையில் தலைவர் கலைஞரின் வழியில் சரியான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வரும் அரசாகவே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.


ஆனால் இப்போது பாமகவோ தங்கள் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தபட்ட மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகிறது. நன்றாய் படித்து வேலைக்கு சென்று வாழ்வில் சிறந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்புள்ள இளைஞர்களை எல்லாம், பிஞ்சிலேயே சாதிவெறி பாய்ச்சி நன்றாய் செழித்து வளர வேண்டிய அந்த இளைஞர்களை வெறும் களைகளாய் மாற்றிக் கொண்டிருப்பதுதான் பாமகவின் சாதனை. மருத்துவராகவும், பொறியாளராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இன்னபிற அரசின் உயர் பதவிகளில் இடம்பெற வேண்டிய இளைஞர்களை உங்கள் அரசியல் நலனுக்காக தவறான வழியிலே வழிநடத்தி வரும் தங்களை இனியும் இச்சமூகத்து இளைஞர்கள் நம்பபோவதில்லை. இதனால் தான் மாவட்ட நிர்வாகிகள் கூட இவர்கள் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு பலரும் கட்சி மாறிசெல்கின்றார்கள்.


அன்புமணி ராமதாசுக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர் கை குலுக்கி உறவாடி கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசை பணியவைத்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த சொல்ல வேண்டும். ஆனால், அதற்கு தைரியம் வேண்டும். இதனை தைலாபுரம் பயிலரங்கத்தில் சொல்லி தர மாட்டார்களா? மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும்!' இவ்வாறு அவர் தனது நேர்காணலிலும் அறிக்கை ஒன்றிலும் கூறியுள்ளார..

இதற்கு முன்னும் பின்னும் ஜி.கே.மணி எதிர்வினையாற்றியுள்ளார்.

இது குறித்த அவர் கூறிய கருந்துக்களில், அமைச்சர் சிவசங்கர் சுயமரியாதையை அடகு வைத்து விட்டு பேசுவதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து இப்போதே விலக தயார் என்றும் அதே சமயம் நாங்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டைத்தர தி.மு.க. தயாரா ? என்றும் மேலும் பல்வேறு விமர்சனங்களையும் - குற்றசாட்டுக்களாக கூறி வருகின்றார்.


பாமக, ஜி.கே.மணியின் இத்தகைய விமர்சனங்கள் குறித்த ஊடகவியாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் - சமூக நீதி பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும், தேர்தல் நேரத்தில் வழக்கமான பிற அரசியல் கட்சிகள் அரங்கேற்றி வரும் காட்சிகளைப் போலவே எண்ண பார்க்கத் தோன்றுகிறது.


இட ஒதுக்கீட்டு முறையில் பயன்பெற முடியாதபடி இன்னமும் அடக்கி - ஒதுக்கப்படும் மிக மிக சிறுபான்மையினமான ஆதி பூர்வகுடி - பழங்குடி இன மதம்மாறிய கிறிஸ்தவ துரும்பர் இன மக்கள் போன்ற நூற்று சமூக மக்கள் இன்னமும், சாதிய கட்டமைப்பில் கடைசி சாதியாக வன்கொடுமைகளுக்குட்பட்டு, வன்னியர்கள் மிகுதியாக வாழும் வட மாவட்டம் - தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமே வாழ்வதையும், திராவிட மாடல் பேசும் தமிழக அரசும், சமூக நீதி பேராளி என்கிற பாமக,வின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றோரும் - அரசும் அறியாமல் பேசுவதைப் போலவே உள்ளது. என்று தங்களின் ஆதங்களை வெளிபடுத்தியும் வரகின்றனர்.

101 views0 comments

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page