top of page

பாஜக- நாட்டின் ஒற்றுமை - மாநில உரிமைகளை பறித்து அதிபர் ஆட்சி முறை ஏற்படுத்த முயற்சி ! தமீம் அன்சாரி குற்றசாட்டு !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை.

ச ராஜா மரியதிரவியம் ..........


பாஜக, நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கிறது. தமீம் அன்சாரி குற்றசாட்டு.!


மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.


ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏற்கத்தக்க நிகழ்வு அல்ல. பாஜக இந்திய ஜனநாயக அமைப்பை மாற்றி அமைக்கும் நோக்கில் இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.!

இந்த அறிவிப்பால் நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில அரசுகளின் அதிகார பறிப்பு என்பவை மேலோங்கும்.

எனவே, மாநிலங்களில் சட்ட உரிமைகளை பறிக்கும் நோக்கில் இந்த ஒன்றிய அரசின் இந்த முடிவு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்களின் அதிகாரத்திற்கு மாற்ற இந்த கொள்கையை முடிவு செயல்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது.!


இந்தியா இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதோடு தமிழக மீனவர்களின் படகுகள் பாதிக்கப்படுவதும் மீன்பிடி உபகரணங்களை அபகரித்து செல்வதும், தொடர்கதையாகி வருகிறது.

அதற்கு ஒரு படி மேல் சென்று இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அபராதம் விதித்ததோடு, அவர்களுக்கு மொட்டை அடித்தது தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழகத்திற்கான அவமானம் அல்ல இந்தியாவுக்கான அவமானம். மொட்டை அடிப்பதற்கு அவர்களுக்கு யார் சட்டரீதியான அதிகாரம் கொடுத்தது? தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்நாட்டு மீன் வர்த்தகமும் வெளிநாட்டு ஏற்றுமதி மீன் வர்த்தகமும் பாதிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனது இந்த சர்வதேச விதி மீறலை கண்டிக்கும் விதமாக இலங்கை தூதரை நேரில் வரவழைத்து நம்முடைய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.


இந்திரா காந்தி இறந்த பிறகு எந்தெந்த அரசியல் அனுபவமும் இல்லாத ராஜீவ் காந்தியை பிரதமராக்கினார்கள். அதே போல இன்று தமிழக முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறப்படுகிறது அதற்கான தகுதி அவருக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன். அவர் துறையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

அதேபோல் நடிகர் விஜய் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தது வரவேற்கக் கூடிய நிகழ்வுதான். பெரியார் இல்லாமல் அரசியல் இல்லை என்பதை விஜய் மிக நன்றாக புரிந்து வைத்துள்ளார். எனவே அரசியலில் இருந்து பெரியாரை ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். !


உக்ரைன் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று அந்நாட்டு அதிபர்களை கட்டி தழுவி தன்னுடைய அன்பை பகிர்ந்து வருகிறார். மேலும் இரு நாடுகளுக்கு இடையில் சமூக உறவை ஏற்படுத்த வேண்டும். போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அவருடைய இந்த முயற்சி வரவேற்க கூடியது தான் அதேசமயம் நம் நாட்டில் மணிப்பூர் மாநிலத்தில் இனவாதம் மதவாதத்தால் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.!

அதை இந்தியாவுக்குள் அனைத்து மதத்தினரும் சகோதர சகோதரிகளாகவும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் வாழ்ந்து வரும் நிலையில் மதவாதம் என்ற பாம்பு இந்தியாவிற்குள் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த பலர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் எனவே மதவாதம் என்பது ஒரு பாம்பு அந்தப் பாம்பை தூண்டினால் அந்தப் பாம்பிற்கு அதைத் தூண்டியவர்களே பலியாவார்கள் இதை பாஜகவும் ஒன்றிய அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

33 views0 comments

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page