top of page

துணை முதல்வரின் செயல்பாடுகளால் ! வளர்ச்சி பாதையில் தமிழகம் ! திருச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம் !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை.

ச. ராஜா மரியதிரவியம் .....


ஒடுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக கழகத் தலைவர் முதல்வர் தளபதியார் நியமித்து அழுகு பார்க்கின்றார். இது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, அடிப்படைகள் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் ஆகும். உலக நாடுகள் உற்று நோக்கும் வகையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் துணை முதல்வர், இளம் தலைவரின் வழிகாட்டல்களின் படி என்னுடைய பணிகள் அனைவருக்குமானதாக அமைத்து செயல்படுவேன் அமைச்சர், கோ.வி.செழியன் திருச்சியில் பேட்டி.

தி.மு.கழக மாணவர் அணியின் முக்கிய நிர்வாகி,தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (அக்.2) தனது சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் சென்னையிலிருந்து திருச்சி வந்தார்.!


திருச்சியில் தி.மு.கழகத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய ஒன்றியத்தியலேயே அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்கிற கொள்கை அடிப்படையில், தி.மு.கழகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் ஓய்வறியா சூரியனாய் மக்களுக்காக உழைப்பாளியாக உழைத்து வருகிறார்.!

உயர் கல்வியில் இந்தியாவில் தொடர்ந்துமுதல் இடம் வகிக்கும் தமிழ்நாடு இன்னும் மேன்மையுற மேல்நிலைக் கல்வியிலும், உயர் கல்வியிலும் புதிய புதிய பாடத்திடங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை முதல்வர் தளபதியார் செய்து வருகிறார்.!

புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வித் துறையை இன்னும் மேம்படுத்த, இன்னும் பிரகாசமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் அந்த துறைக்கு அமைச்சராக நியமித்து இருக்கிறார்.எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம். அந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்ட, அடிப்படை உரிமைகள் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார்.!

தளபதியாரின் அந்த சமத்துவம் சமூகநீதி நிறைந்த உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.! இந்தியாவுக்கே ரோல் மாடலாக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் தளபதியாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள பெரிதும் கடமை பட்டுள்ளேன். முன்னேற்றப் பாதையில் தமிழ்நாட்டையும், இளம் தலைமுறை யினரையும் அழைத்துச் செல்லும் கழகத்தலைவர், முதல்வர், துணை முதலமைச்சர், இளம் தலைவர் ஆகியோர் வழிக்காட்டல்களின் படி என்னுடைய உயர்கல்விக்கான பணியை அமைத்துக் கொள்வேன்.!


இவ்வாறு அவர் கூறினார்.

164 views0 comments

Kommentarer


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page