top of page

சென்னை தொலைகாட்சி நிலைய சர்ச்சை ! ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை

ச. ராஜா மரியதிரவியம் .........


சென்னை டி.டி. தமிழ் தொலைகாட்சி நிலைய சர்ச்சை ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுக ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.


சென்னை தொலைக்காட்சி நிலையம் ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்நிலையில் இன்று (18.10.2024) மாலை நடைபெற்ற இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது.!


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவத்தால் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது.

இது இறித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின நிறைவு விழா இன்று மாலை (18-10-24) நடைபெற்றது.!

விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மக்களிடம் தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறி விமர்சனம் செய்திருந்தார்.!


இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர்கள். இதனால் பெரும் அதிர்ச்சியும் சர்ச்சையும் பரப்பும் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.கழக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.!

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!


திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

93 views0 comments

Bình luận


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page