![](https://static.wixstatic.com/media/569adb_0faba986107b4357b85e9f5c39a366a4~mv2.jpg/v1/fill/w_980,h_607,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_0faba986107b4357b85e9f5c39a366a4~mv2.jpg)
தோகமலை
ச.ராஜா மரியதிரவியம் .....
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவை அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து 2026 லிலும் கழக ஆட்சி தொடர உறுதியுடன் பணியாற்றுவோம் என்று சமூக வளைதளத்தில் அமைச்சர் கே. என்.நேரு பதிவிட்டுள்ளார்.
![](https://static.wixstatic.com/media/569adb_13318327b72540bc83dc5ee8827241fa~mv2.jpg/v1/fill/w_960,h_640,al_c,q_85,enc_auto/569adb_13318327b72540bc83dc5ee8827241fa~mv2.jpg)
தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று, அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
![](https://static.wixstatic.com/media/569adb_4cf1164ec20d4fafa49ea7f4fa3c9de9~mv2.jpg/v1/fill/w_935,h_960,al_c,q_85,enc_auto/569adb_4cf1164ec20d4fafa49ea7f4fa3c9de9~mv2.jpg)
அதன்படி, தி.மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேனி மாவட்டத்திற்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தர்மபுரி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![](https://static.wixstatic.com/media/569adb_e37436a6766a4783955462dc58b91232~mv2.jpg/v1/fill/w_980,h_1307,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_e37436a6766a4783955462dc58b91232~mv2.jpg)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்டத்திற்கும், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நீலகிரி மாவட்டத்திற்கும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![](https://static.wixstatic.com/media/569adb_d57dc073861243bc92ebd637d5243caf~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_d57dc073861243bc92ebd637d5243caf~mv2.jpg)
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![](https://static.wixstatic.com/media/569adb_f7daa2f7c39143269b6c5592adcb603c~mv2.jpg/v1/fill/w_980,h_984,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_f7daa2f7c39143269b6c5592adcb603c~mv2.jpg)
திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமனம் செய்துள்ள கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க. ஸ்டாலினுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2026-லும் நாம் கழகத்தின் ஆட்சி தொடர அயராது உழைப்போம்.! தமிழ்நாட்டின் நலன் காப்போம்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பதிவிட்டுள்ளார்.
Comments