top of page

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ! ஆதவ் அர்ஜுன் கருத்து! கூட்டணியில் விரிசலுக்கு இடமில்லை ! தொல்.திருமா விளக்கம் !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை.

ச.. ராஜா மரியதிரவியம் .....


ஆதவ் அர்ஜூனா கருத்தால் தி.மு.க., - வி.சி.க., இடையில் எந்த சலசலப்பும் இல்லை; விரிசலும் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வீடியோ பலத்த விவாதங்களை எழுப்பிவிட்டது. மெளனம் கலைத்தார். முற்றுப்புள்ளி வைத்தார் தொல்.திருமா.எம்.பி.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றில், 'சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாதா' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பேட்டியால் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியது. 'ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ரவிக்குமார் கூறி இருந்தார். 'ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர் நீலகிரி மக்களவை உறுப்பினர். ஆ.ராசாவும் கூறியிருந்தார்.

இது குறித்த பரப்பு சூழலுங்களுக்கு மத்தியில், இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, வி. சி.க தலைவர். சிதம்பரம் மக்களவை உறுப்பினர் முனைவர்.தொல் திருமாவளவன் பதிலளித்து கூறியுள்ளார்..

ஆதவ் அர்ஜூனா கருத்தால் தி.மு.க., - வி.சி.க., இடையில் எந்த சலசலப்பும் இல்லை; விரிசலும் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வீடியோ பலத்த விவாதங்களை எழுப்பிவிட்டது.


ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசினேன். கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி தான் உட்கட்சி விவகாரங்களில் முடிவு எடுப்போம். ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் தி.மு.க., உடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “திமுக - விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை.!

என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியான, ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற வீடியோவில் இருந்த கருத்தை விவாதத்திற்குப் பலரும் எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது. அதனால் திமுக - விசிக இடையே எந்த சிக்கலும் எழாது. அவ்வாறு சிக்கல் எழுவதற்கு வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

146 views0 comments

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page