தோகமலை.
ச ராஜா மரியதிரவியம்....
டெண்டர் முறைகேடு மாஜி எஸ்.பி., வேலுமணி மீது வழக்குப்பதிவு ! குற்றப்பத்திரிக்கை தாக்கல் எப்போது ! அறப்போர் இயக்கம் கேள்வி !
லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. சென்னையில் 8 லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்கள் இருந்தும், கடந்த 3 மாதங்களாக ஒரு எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு வருடத்திற்கு ரூ.90 கோடியும், அதிகாரிகளுக்கு ரூ.54 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.!
மேலும், தூக்கத்தில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை எழுந்து, குற்றங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காப்பி பொடியை அனுப்பி அறப்போர் இயக்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.!
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் ரூ.740 கோடி மதிப்பில் போடப்பட்ட சாலை மற்றும் மழைநீர் வடிகால் டெண்டர்களில் நடந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.!
இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , 'காபி பொடி தூக்கத்தை கலைத்ததா?
2018ம் ஆண்டு நவம்பரில் அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை அ.தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டுகள் இழுத்தடித்து, தற்போதைய, ஆட்சியிலும், 3 ஆண்டுகள் இழுத்தடித்து கடைசியாக தற்பொழுது எப்.ஐ.ஆர்.,போடப்பட்டுள்ளது.!
இனியும் தாமதிக்காமல் அடுத்த 2 மாதங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கித்தர வழி செய்ய வேண்டும்,' எனக் குறிப்பிட்டுள்ளது.!
மேலும், மற்றொரு பதிவில், 'A1 வேலுமணி சார்பாக அவருக்கு நெருக்கமான கட்சிக்காரரும், ஒப்பந்ததாரருமான கே.சி.பி., சந்திரசேகர் அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமர்ந்து ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்களை பிரித்து கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளது.!
அதாவது டெண்டர்களை அமைச்சர் சார்பாக செட்டிங் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். கமிஷன் கொடுத்து டெண்டர் எடுத்தவர்கள் எப்படி தரமான வேலையை செய்வார்கள்?,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.!
தொடர்ந்து, 2015ல் சென்னை மாநகராட்சி 400 பஸ் நிறுத்தம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அதில், ஒரு பஸ் நிறுத்தம் கட்ட அரசு நிர்ணயித்த தொகை ரூ.12 லட்சம். டெண்டர் பேக்கேஜ் எண்ணிக்கை 8. இந்த டெண்டரில் ஸ்கைராம்ஸ், ஷைன், பைன்ஆர்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், மூன்று நிறுவனங்களுக்கும் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்த 3 நிறுவனங்களுக்கும், ஒரே முகவரி, ஒரே முதலாளிகள் குழு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.!
மேலும், இந்த நிறுவனங்கள் டெண்டருக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மோசடி டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்யுமா? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.!
அறப்போர் இயக்கம் தொடர் வலியுறுத்தலால். அதிமுக மாஜிக்கள் பலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் சூழலே தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார பரப்பரப்பு பேச்சுகளுக்கும் பஞ்சமில்லை.!
என்னதான் நடக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Comments