top of page

துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் ! அனைத்து மக்கள் நலப்பணிகளும் சிறக்கட்டும் ! அமைச்சர் கே.என்.நேரு நேரில் வாழ்த்து !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை.

ச ராஜா மரியதிரவியம் .......


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானர் உதயநிதி ஸ்டாலின் ! அனைத்து மக்கள் நலப்பணிகளும் சிறப்புற அமைச்சர் கே.என் நேரு நேரில் வாழ்த்து !


தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார்கள .

ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. !


முன்னதாக தமிழக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தகவல்கள் வெளியாயினது.!

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.கழக தலைவர் மு.க. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். அதன்படி தி.மு.கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் - விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானார். மேலும், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும் . சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் .

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் நலத்துறையும் . அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.!


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொருப்பேற்றனர், இந்த பெயர் பட்டியளை தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.!

இந்நிலையில், தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவுக்கப்பட்டதையொட்டி தி.மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை - சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், கழகத்தலைவர், முதல்வர் தளபதியார் வழியில், அவரின் அனைத்து மக்கள் நலப்பணிகளும் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகளை தெரிவித்தார்,!

184 views0 comments

Comentarios


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page