![](https://static.wixstatic.com/media/569adb_f056cb58e725428fbe4c95198b4504e5~mv2.jpg/v1/fill/w_296,h_468,al_c,q_80,enc_auto/569adb_f056cb58e725428fbe4c95198b4504e5~mv2.jpg)
வரலாற்றை அறிவோம்.!
பாபாசாகேப்
Dr B.R.அம்பேத்கர் அவர்களின் "பேச்சும் எழுத்தும்" நூல், தொகுதி -37.
*- உரையில் சிறு தொகுப்பு!*
சிறுபான்மையினரை சமாதானம் செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஒருபோதும் கட்டளையிடக் கூடாது
------------------
*பம்பாயில் 1947-ம் ஆண்டு செப்டெம்பர் 25-ல் சித்தார்த காலேஜ் பார்லிமெண்டை தொடங்கிவைத்து Dr அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை:-*
தொடர்ச்சி.....
தனிவாக்கு வங்கி என்பது ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனத்தின் ஆரம்பமும் முடிவும் அல்ல. நமக்குள்ள வசதிகளுக்கு தனிவாக்கு வங்கி நல்லதுதான். ஆனால்... அதை மட்டும் நாம் நம்பியிருக்கக் கூடாது. தனி வாக்கு வங்கி உங்களுக்குக் கிடைத்து விட்டாலும், அரசியல் பாதுகாப்பு உங்களுக்கு இல்வை. சட்ட மன்றங்களிலும், பணிகளிலும் சில அரசியல் பாதுகாப்புக்களை உங்களுக்கு நான் பெற்றுத்தர முடியும். என்னுடைய முயற்சிகளினால் தான்... சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சில பாதுகாப்புக்கள் கிடைத்துள்ளன.
இந்தக் கோரிக்கையில் நான்தான் விடாப்பிடியாக இருந்தேன். இந்தக் கோரிக்கையில் நான்தான் விடாப்பிடியாக இருந்தேன். இந்தக் கட்டத்தில் என்னை அதிருப்திப்படுத்த அரசியல்நிர்ணயசபைக்குதைரியமி
ல்லை. சிறுபான்மையினருக்கு என்னால் உண்மையான சேவை செய்ய முடிந்துள்ளது என்று சொல்வதால் நான் மகிழ்ச்சி யடைகிறேன்.
நீங்கள் தற்போது ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது சாத்தியமே. நானும் இதில் பெரிய மகிழ்ச்சி அடைந்து விடவில்லை. என்றாலும்... எதிர்காலத்தில் நமது பணியைச் செய்தே தீர வேண்டும்.
பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் வரலாறை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். அது கடந்த 24 ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியடைந்து இன்று ஆட்சிக்கே வந்துவிட்டது. இதே கட்சி முதலில் தொடங்கப் பட்டபோது நாடாளுமன்றத்தில் அதற்கு ஒரு உறுப்பினர் கூட இருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? தேர்தல்களில் கட்சி ஜெயித்தது அதன் வெற்றியல்ல, மாறாக... கட்சியின் வேலைத் திட்டங்களும் கொள்கைகளும்தான் வெற்றியடைந்துள்ளன என்பதையே இது காட்டுகிறது.
இதே போல ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனம் அதன் கோட்பாடுகளுக்காக வெற்றிபெறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இதனால்தான் நான் ஏமாற்றமே அடையவில்லை. இதே காரணத்துக்காக நாம் பின்வரும் 'மூன்று' விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்:-
ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனம் எந்த நிலைமையிலும் தனது ஸ்திரத் தன்மையை காப்பாற்றி வரவேண்டும். பிராமணர் அல்லாதார் கட்சி பற்றிய சரித்திரம் நம்முள் உள்ளது. காங்கிரஸ் கட்சி பிரபலமடைவதற்கு முன்னால் அகில இந்திய கட்சித் தலைவர்கள் காங்கிரசுக்குத் தனித்தனியாகச் சென்றபோது, அவர்கள் தம்முடைய தனித்தனிக் குறிக்கோள்களுடன் சென்றனர். அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்களாகிவிட்டனர். எனவே காங்கிரசில் இவர்களுக்குச் செல்வாக்கு அன்றும் இல்லை, இன்றும் இல்லை.
அவர்கள் மிகப் பெரும்பான்மையினராக இருந்த போதும் அவர்கள் ஆளப்பட்டுதான் வந்தார்கள்உங்களுக்குத் திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். வேறெந்தக் கட்சியிலும் உள்ள பெரிய தலைவர்களின் தைரியமும் துணிவும் உங்களுக்கு இருக்க வேண்டும். திறமையான தலைவர்கள் இல்லாத கட்சி ஒன்றுமில்லாமல் போகும்.
1931-ம் ஆண்டு பிரிட்டிஷ் தொழிற்புரட்சி தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம். இந்தியாவிலுள்ள பிராமணர் அல்லாதார் கட்சிக்கும் இது பொருந்தும்
ஒரு காலத்திலும் விலை போகாத தலைமை எந்தவொரு கட்சிக்கும் மிக முக்கியம். இதே போன்று கடமைப் பொறுப்புள்ள ஊழியர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு இரண்டாது முக்கிய அம்சம் ஆகும்.
அரிஜன வகுப்பார் சம்மேளனம் பல தலைவர்களை உருவாக்க வேண்டும். ஒருவர் கூட எனக்குத் திருப்தி தருபவராக இதுவரை இல்லை. ஒருவிதத்தில் ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களின் தலைவர் எந்த நேரத்திலும் எதற்காகவும் விலைபோக மாட்டார். மற்ற அமைப்புகளின் தன்மை என்ன? அவர்கள் எப்போது தேர்ச்சி பெறுவார்கள்?
எனது தேவையை நீங்கள்தான் நிறைவு செய்ய வேண்டும். ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனம் தனது அரசியல் ஸ்திரத் தன்மையைக் காத்து வரவேண்டும்.*
*பாபாசாகேப்
Dr B.R.அம்பேத்கர்*
Comments