top of page

கரூர் அருகே! உடற்பயற்சி - விளையாட்டு திடல் இடித்து கழிப்பிடம்! பல்வேறு திட்டங்களிலும் மெகா மோசடி! துணை முதல்வருக்கு கோரிக்கை!

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்



கரூர் அருகே அமைக்கப்பட்டிருந்த இளைஞர் விளையாட்டு மைன தானம் - உடற்பயிற்சி கூடம் அகற்றி கழிப்பிடம் கட்டும் ஒப்பந்தக்காரர். குடிநீரில் கழிப்பிட நீர் கலக்க வும் வாய்ப்பு என்று அச்சத்தில்பொதுமக்கள்!கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், ஊரக குடியிருப்புகள் பராமரிப்புப் பணிகளிலும் பல லட்சக்கணக்கில் அரசு நிதி முறைகேடு - அரசுக்கு நிதியிழப்பு. நடவடிக்கை எடுக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை! நேரடி கள ஆய்வு செய்திட பெரம்பலூர் எம்.பி.கே.என்.அருண் நேருவுக்கும் வலுக்கும் கோரிக்கை!

கரூர் மாவட்டம், தோகமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்பட்ட 20 ஊராட்சிகள் உள்ளது. இதற்குட்பட்ட பொருந்தலூர் ஊராட்சி உட்பட 20 ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் மூலம்கட்டி கொடுக்கபட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகளும். இதே போன்று ஒன்றியம் முழுவதும் 20 ஊராட்சிகளுக்குட்பட்டு மேலும் 2.5000 வீடுகளும் ஆதிதிராவிடர்கள் உட்பட பல தரப்பட்ட மக்கள் வசிப்பிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி உண்மையிலே தகுதியுள்ள, ஊரக பகுதிகளில் பராமரிப்பு செய்ய வேண்டிய நிலையிலுள்ள, உண்மையான பயனாளிகள் பெயரிலுள்ள வீடுகளை, ஊரக வீடுகள் பராமரிப்பு - புனரமைப்பு திட்டத்தின் மூலம் வீட்டின் தன்மைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ1.70. லட்சம் வரை நிதி பெற்று தற்போதய நிலையிலிருந்து தங்கள் குடியிருப்புகளை சரிபடுத்தி வாழ்வாதாரம் காத்துக் கொள்ளவும், கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஏற்படுத்திக் கொள்ளவும் 2023 - 2024.நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் பல கோடிகளை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.!

இப்படி முதல்வரால் மக்கள் நலன் பேணும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருந்தலூர் உட்பட தென்பகுதி 5 ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை பழுது சரிபார்த்தல் - பராமரிப்பு செய்தல் என்கிற பெயரில் சுவற்றுக்கு சுண்ணாம்பை மட்டும் அடித்து விட்டு, ஆணையர் ராஜேந்திரன், உதவி ஆணையர் இந்திராணி, ஓவர்சியர் விஜயராணி உட்பட கீழ்மட்டம் முதலே தமிழக முதல்வரும், அரசும் நல்ல நோக்கத்திற்காக செயல்படுத்த முயற்சித்த கலைஞரின் வீடுகள் பழுது- பராமரிப்பு திட்டத்தையே நீர்த்து, மழுங்கடிக்கச் செய்ததுடன் அரசு ஒதுக்கிய நிதியை ஜன.5. க்கு முன்வரை பொருப்பிலிருந்த அதிமுக உள்ளாச்சி அமைப்பினர்கள் அவர்களின் கணவர்களால் மிகப்பெரிய அளவிலான மோசடி செய்யப்பட்டுள்ளதாக விவரமறிந்த இப்பகுதியினர் மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் கூறுகையில் பொருந்தலூர் உட்பட உள்ளாச்சியில் கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் அடிப்படை வசதிக்காக கொடுக்கும் மனுக்களை பெறாமல், இவர்கள் எவ்வளவு அதிக தொகையில் கட்டுமானம் போன்ற பணிகள் செய்யலாம் என்பதிலே குறியாக செயல்பட்டு வந்தனர்.!

கடந்த 5 ஆண்டுகளில் தெலுங்கபட்டி நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு சிற்றூர்களில் பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருவதாக பல லட்ச ரூபாய் அரசு நிதியில் ஏதோ பெயருக்கு என்று ஏற்படுத்தியதாக கூறி அவற்றில் பெரும் தொகையை தனது பாக்கெட்டில் அமுக்கி கொண்டவர்கள், தங்களின் பணிக்காலம் முடியும் சில நாட்களுக்கு முன்பு தெலுங்க பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ஒட்டுமொத்த பகுதிக்கே குடிதண்ணீர் சப்ளை செய்யும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கும், விவசாயிகள் பயன்படுத்தும் கதிரடி களம், தமிழக அரசு ஊக்கப்படுத்தி சிறுப்பு நிதி ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி மையம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாவ து நன்கு அறிந்தும் தங்களின் லாப நோக்கத்திற்காக அவசர கதியில் பெண்கள் கழிப்பறை எனும் பெயரில் தரமற்ற, முழு அரசு ஒதுக்கீட்டை கூட பயன்படுத்தாமல், அறுக்கத் தெரியாதவன் 52 அறுவாய்களோடு வந்த கதையாக கழிவரை கட்டுமானத்தை செய்து வருவதாகவும், இதனால் அருகிலுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன்கள் ஒரு கட்டத்தில் கசிவு ஏற்பட்டால், மீண்டும் வேங்கை வயல் சம்பவம் போல் நேரிடுவதுடன், சுற்றுப் பகுதியில் காற்றோடு மாசு ஏற்பட்டு கொடிய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உருவாகுடன் முதல்வரின் தலைமையிலான தமிழக அரசுக்கு மீளா அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் இவர்களின் செயல்பாடுகள் உள்ளதாகவும், இது குறித்து யூனியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் வரைமுறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே உள்ளதாகவும் பொதுமக்களின் தரப்பில் சுப்பிரமணியன் ஆதங்கத்துடன் கூறி வருவதும் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக உள்ளது.

மிக சிறுபான்மை மதம்மாறிய பழங்குடியினத்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, தற்போது புதிதாக கட்டபட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக தென்புறம், எதற்கும் பயனற்றப் பகுதியில் ...........


ஒரு சென்ட் இடம் கேட்டு முதல்வர் முதல் மாவட்ட நிர்வாகம் வரை மனுக்கள் அனுப்பியும், இதே பகுதியில் பிழைப்புக்காக வந்த வன்னிய மக்களை கொண்டு, இம்மக்களின் மனுக்களை, ஊராட்சி தலைவியின் கணவர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் - இவரின் கையூட்டுக்கு ஆசைப்பட்டுஆணையர் ராஜேந்திரன், உதவி ஆணையர் விஜயராணி, ஓவர்சீஸயர் இந்திராணி, ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் மற்றும் உள்ளூர் லோக்கல் வருவாய்துறையினர்கள் உண்மை நிலையை மறைத்து அரசுக்கு தவறான தகவல்களை அனுப்பி மனுக்களை நீர்த்துச் செய்து வந்ததாக கூறுகின்றார்கள் மதம்மாறிய பழங்குடியின சங்க நிர்வாகிகள்.!

இதற்கு உதராணமாக, பொருந்தலூர் ஊராட்சி கட்டிடம் பலலட்சம் செலவில் புனரமைக்க பட்டநிலையில், அவசியமோ, தேவையோ யில்லாத போது சுமார் ரூ 40 லட்சம் அரசு நிதியை தங்களது தேவைக்காக புதிய ஊராட்சி அலுவலகத்தை உரிய தரமின்றி, யூனியன் அதிகாரிகளோடு சேர்ந்து ஏனோ தானோவென்று கட்டியுள்ளனர்.!

இதே போன்று பொருந்தலூர் ஊராட்சியில் பல ஊர்களில், தலித். உள்ளிட்ட பொதுமக்கள் நேரடியாக பாதிக்கும் வகையில், வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் அரசு நிதியை - மக்கள் வரிப்பணத்தை மோசடி செய்து முதல்வரின் தலைமையில் மக்களாட்சி நடத்தி வரும்தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பத்தன் மையை இழக்கச் செய்து அவப்பெயரை திட்டமிட்டே ஏற்படுத்தியும் வருகின் கின் றார்கள்.!

பொருந்தலூர் உள்ளாட்சி அமைப்பு அதிமுக பெண் பிரதிநிதியின் கணவரே (மாவட்ட அதிமுக நிர்வாகி) இத்தகைய மோசடியை யூனியன் அதிகாரிகளோடு சேர்ந்தே செய்து வந்த விவரத்தை பல முறை சம்மந்தபட்ட ஊரக வளர்ச்சி, வருவாய் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரையில் எழுத்துப்பூர்வமாக கொண்டு சென்றவர்களை லோக்கல் போலீசு செல்வாக்குடன் - சமூக விரோதிகளுடன் சேர்ந்து இத்தகைய மக்கள் நலப் பணிகளை முன்னெடுப்பவர்களை பொய் வழக்குகள், குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் மீது அவதூ று, பரப்பும் வகையில் தொடர்ந்து அனுப்பி பழி வாங்கிய கொடுமையெல்லாம் தான் சார் இங்கே நடந்தது என்கின்றனர் கண்ணீருடன் .! இதனை எளிதில் மறக்க முடியாத ஒன்றாக வே பார்க்க வேண்டியுள்ளது.!

இந்நிலையில் எங்கே கடந்த 5 ஆண்டுகளில் பொருந்தலூர் ஊராட்சியில் நடத்தபட்ட பல்வேறு முறைகேடுகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அவசரமாக ஆவணங்களை 24 x 7 என்கிற பாணியில் அரசு விதிகளுக்கு முற்றிலும் மாறாக திருத்தம் செய்வதுடன் தொடர்புடையவர்களின் உண்மை முகம் எங்கே வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்கிற பயத்தில், பொருந்தலூர் ஊராட்சி உட்பட மேலும் சில ஊராட்சி பொறுப்பு அதிகாரிகளாகயிருந்தவர்கள் அவசர அவசரமாக வேறு பகுதிகளுக்கு பணி மாறுதல் பெற முயற்சிப்பதாகவும், இப்பகுதியினரால் கூறப்படும் கடும் குற்றச்சாட்டுக்களையும் எளிதில் கடந்து செல்லவும் முடியவில்லை.!


எனவே தமிழக துணை முதல்வர், தி.மு.கழக இளைஞரணி செயலாளர் உதய நிதிஸ்டாலின். பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் கே.என்.அருண் நேரு, குளித்தலை எம்.எல்.ஏ.நகர தி.மு.கழக செயலாளர் இரா. மாணிக்கம் ஆகியோர் இனியாவது இத்தகைய புகார்கள் உரிய நே ரடி கவனம் செலுத்தி இம்மக்களின் நியாயமான புகார்கள் மீது நேர்மையான, வேறு சிறப்பு அதிகாரிகளை கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தியும் வருகின்றனர்.!


திருச்சி வின்ஸி .....



454 views0 comments

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page