top of page

நடிகர் விஜய்க்கு பறந்த வக்கீல் நோட்டீஸ் ! 5. நாட்கள் கெடு விதித்த சமாஜ்வாடி கட்சி ! குழப்பத்தில் கட்சியினர் !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்



நடிகர்ரா விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க போட்டியிடும் என்று அறிவித்து இருந்தார்.!


இதனிடையே கட்சி தொடங்கிய ஒரு சில வாரங்களில், தனது கட்சியின் கொடியை விஜய் வெளியிட்டார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திம், நடுவில் மஞ்சள் நிறத்திலும், 2 யானைகளுக்கு நடுவில் பூ என்று அந்த கொடி வடிவமைக்கப்பட்டுடிருந்தது. இந்த கொடி வெளியிட்டது முதலே உடன்சர்ச்சையும் எழுத்தொடங்கியது!.


தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானையை விஜய் தனது கொடியில் பயன்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டிருந்தனர்.!

மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும்,27-ந் நடைபெற உள்ளது.!


இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

இந்நிலையில், விஜய் தனது கட்சியின் கொடியில் இருக்கும் யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் கொடி விவகாரத்தில், தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறிவிட்டதால், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், த.வெ.க கட்சி கொடியில் இருந்து யானையை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியின் துணை தலைவர் சந்தீப் நடிகர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.!


அதில், 5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடதக்கது.

249 views0 comments

Commentaires


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page