![](https://static.wixstatic.com/media/569adb_771d6d6e053146a79c2a765f5a0c51c0~mv2.jpg/v1/fill/w_561,h_500,al_c,q_80,enc_auto/569adb_771d6d6e053146a79c2a765f5a0c51c0~mv2.jpg)
காதுகுத்துர வேலையெல்லாம் இங்கே வேணாம் பழனிசாமி என்று அதிமுக, புகழேந்தி தாக்கு !
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக, முன்னால் நிர்வாகி புகழேந்தி பேசுகையில்,
யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என எழுதிக் கொடுத்து வந்து விட்டீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறீர்கள். அதைச் சொல்ல வேண்டியது சிவில் நீதிமன்றம். நீங்கள் திரும்பத் திரும்ப தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதில் முடிவு எடுக்க வேண்டியது சிவில் நீதிமன்றம் தான்.
![](https://static.wixstatic.com/media/569adb_cdd419b30ba14bff96b074e2c67726d1~mv2.jpg/v1/fill/w_980,h_984,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_cdd419b30ba14bff96b074e2c67726d1~mv2.jpg)
ஒரே அக்கிரமம் அநியாயமாக இருக்கிறது. உச்சபட்சமாக மேலேபோய் நின்று கொண்டு யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள்; பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது; கட்சி உங்கள் கையில்தான் இருக்கிறது; சின்னம் கூட இருக்கிறது. எல்லாத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே உங்களிடம் இருந்தும் என்ன ஆச்சு. பேரூராட்சியில் ஜீரோ. ஆனால் உங்களிடம் தான் பொதுக்குழு இருக்கிறது. நகராட்சியிலும் ஜீரோ. ஆனால் பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக கம்ப்ளீட்டாக ஜீரோ. முதலில் தேனி வந்து கொண்டிருந்தது அதுவும் இப்பொழுது சேர்த்து ஜீரோ ஆகிவிட்டது. ஆனால் கட்சியும் பொதுக்குழுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் சில பூத்துகளில் ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு பதிவாகி இருக்கிறது. இந்த கொடுமையை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது. ஆனால் பொதுக்குழு உங்கள் கையில் தான் இருக்கிறது. இப்பொழுது ஒரு பர்சன்டேஜ் ஓட்டு ஜாஸ்தியாக வாங்கிவிட்டேன் என்று சொல்கிறார். காது குத்துற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் பழனிசாமி''
இவ்வாறு அவர் கூறினார்..
ஓ.....மாப்பிள்ளை அவருன்னா? சட்டை பேண்ட் யாருது என்பதைப்போல் உள்ளது.!
என்ன தலை சுத்தூதா?
Comments