top of page

ஆணையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ! மக்கள் சேவைக்கு தயாரான ட்ரோன்கள் ! அமைச்சர் கே. என்.நேரு நேரில் ஆய்வு !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை

ச. ராஜா மரியதிரவியம்.......


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி சென்னை மாநகராாட்சி தாழ்வான பகுதி மக்களுக்கு அத்தியாவச சேவைக்கான ட்ரோன்களின் செயல்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்களின் சோதனை முன்னோட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்.16) ஆய்வு செய்தார்.!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (15.10.2024) வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு இன்று (16.10.2024) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் (14.10.2024) இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வந்தது. முன்னதாக நிலையில் தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் தொடந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.!

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்கள், அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக முதன்மைச்செயலாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனைக்கான முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று (அக்.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.!

வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.!

மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, மக்களுக்கான அவசர கால சேவையின் போது, இடையூறுகள் - தடைகள் ஏற்படாமலிருக்குமாறும் அனைத்துத்துறை அதிகாரிகளும் மிகவும் கவனமுடனும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், அத்தியாவச தேவைகள் இடர்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கு முழுமையாக சென்றடைய செய்ய வேண்டும். இப்பணிகளை முதல்வர் தளபதியார் தனி கவனத்துடன் நேரடியாகவே கண்காணித்து வருகிறார். ஆகவே இப்பணிகளில் அலட்சியம் என்பது அறவே இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். !


ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், உட்பட அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

360 views0 comments

Comentários


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page