![](https://static.wixstatic.com/media/569adb_8fceb14ec4be42d39214e04c980d9bc8~mv2.jpg/v1/fill/w_678,h_452,al_c,q_80,enc_auto/569adb_8fceb14ec4be42d39214e04c980d9bc8~mv2.jpg)
மது இல்லாமல், அருந்தாமல் மாநாடு நடத்தியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.!
சீமான் உறுதியுடன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. ஓட்டுகளை குறிவைத்த இட ஒதுக்கீடு வழங்கினால், நாட்டை காப்பாற்றுவது யார்?
![](https://static.wixstatic.com/media/569adb_20452e84067c450d9068428a11dff0a6~mv2.jpg/v1/fill/w_640,h_360,al_c,q_80,enc_auto/569adb_20452e84067c450d9068428a11dff0a6~mv2.jpg)
ஒரே நாடு ஒரே தேர்தல் அது நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனையும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையும் கிளப்புகின்றனர். நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா? மேற்கு வங்கத்திலும், பிகாரிலும் 7 கட்டமாக நடத்தியவர்கள் இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது.!
![](https://static.wixstatic.com/media/569adb_4c6a88eb32654a1c8889d3185f40127e~mv2.webp/v1/fill/w_640,h_356,al_c,q_80,enc_auto/569adb_4c6a88eb32654a1c8889d3185f40127e~mv2.webp)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் உயர் ரக விடுதிகளில் மதுவிற்பனை செய்யலாம். ஆனால் தெருவுக்குத் தெரு உள்ள அரசு மதுபான கடையினை மூடவோம். தமிழகத்தில் மது வாடை இல்லாமல் நடந்த மாநாடு நாம் தமிழர் கட்சி மாநாடு மட்டுமே. விஷமென்று தெரிந்தும் மதுவை அருந்தக்கூடாது.!
அமெரிக்கா சீன நிறுவனங்கள் இந்தியா மீது பொருளாதார படையெடுப்பை செய்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் பாதுகாப்பு கூட்டணி அல்ல, கொள்கைதான். சாதி, மதம், சாராயம், திரை கவர்ச்சி, பணம் புரட்சியை தடுக்கும் காரணிகளாக உள்ளது. தி.மு.க-விற்கும் அ.தி.மு.க-விற்கும் கொள்கை வேறுபாடு கிடையாது.!
![](https://static.wixstatic.com/media/569adb_cdd419b30ba14bff96b074e2c67726d1~mv2.jpg/v1/fill/w_980,h_984,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_cdd419b30ba14bff96b074e2c67726d1~mv2.jpg)
இலங்கை தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையை காட்ட பொது வேட்பாளர் நிறுத்த வேண்டும். அவர்கள் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கொள்கையை நோக்கி செல்ல வேண்டும்.!
வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களுக்கு எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மீகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியில் தலைநகராக வைக்க வேண்டும். இதனை செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். எம்.ஜி.ஆர் முன்மொழிந்தார். அதனை தி.மு.க. முடக்கிவைத்தது.
என்று அவர் கூறினார்.
Comments