top of page

முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ! எப்போதும் வென்றானில் கனிமொழி கருணாநிதி உறுதி ! விடுப்பட்டவர்களுக்கும் மகளீர் உரிமைத் தொகை !

Writer's picture: உறியடி செய்திகள் உறியடி செய்திகள்

தோகமலை.

ச. ராஜா மரியதிரவியம் .......


தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார்” என்று எப்போதும்வென்றானில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எப்போதும்வென்றான் கிராமத்தில் நேற்று (அக்.2) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி‌.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி த் தலைவர் செ.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.!

கிராம கூட்டத்தில், தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கவிஞர்,கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:

கிராமங்களில் வாழும் அனைத்துத்தரப்புமக்களின், அடிப்பை தேவைகள், கிராம வளர்ச்சிகள் குறித்த மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை, அரசின் பிரதிநிதிகளாக, அதிகாரிகள் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்த கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.!

அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களையும் தேடிவந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக அங்கேயே உரிய நடவடிக்கை எடுத்து, அந்த இடத்திலேயே தீர்வு காணக்கூடிய மக்களுக்கான அரசாக தி.மு.கழக அரசு செயல்பட்டு வருகிறன்றது.


கிராம சபைக் கூட்டங்களை, முகாம்களை தொடர்ந்து நடத்தி ஒட்டுமொத்த மக்களையும் தேடி வந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கான தீர்வு காணக்கூடிய முயற்சிகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு, கழகத் தலைவர் நமது முதல்வர் தளபதியார் தலைமையில் செய்து வந்து கொண்டிருக்கிறோம்.இங்குள்ள நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் விவசாயிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு அரசாணையை, மிகவும் எளிய படுத்தி நமது முதல்வர் தளபதியார் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். !

தங்கள் நிலங்களுக்காக குளங்களில் உள்ள கரம்பை மற்றும் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.!

இதன் மூலம் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில இடங்களில் நடைமுறை பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் (அரசின்) எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நிச்சயம் தீர்வு உடனடியாக ஏற்படுத்தித்தரப்படும் .


அந்த அடிப்படையில் இந்த கிராம சபா கூட்ட நிகழ்வில் தெரிவித்திருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு விரைவில் மாவட்ட நிர்வாகமும் நாங்களும் நிச்சயம் தீர்வு ஏற்படுத்த நடவடிக் எடுக்கப்படும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.!

எப்போதும் வென்றான் கிராம பகுதிகளில், உள்ள நீர் நிலைகளில் மண் எடுப்பதற்கு உள்ள ஒரு சில நடைமுறை தடைகள் நிச்சயம் அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்.!


கிராமங்களில் வாழ்வோரின் வாழ்வாதரம் காத்திடத்தான் 100 நாள் வேலைவாய்ப்பை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த திட்டம்.


இதற்கு மத்திய அரசுதான் நிதியைத் தர வேண்டும். ஆனால், இன்னும் உரிய நிதி வரவில்லை. ஒன்றிய அரசின் நிதி வந்தவுடன் நிச்சயமாக 100 நாள் வேலைத்திட்டம் மூலம், இத்திட்டம் மூலம் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் செய்து தரப்படும்.


அதற்கு முன்பாக எவ்வளவு வேலை வாய்ப்பு தர முடியுமோ அதை அந்தப் பகுதியில் உள்ள அதிகாரிகள் செய்து தர முன்வர வேண்டும் என்று கழகத் தலைவர் முதலமைச்சர் தளபதியார் அறிவுறுத்தி இருக்கிறார்.!

மகளிர் உரிமைத் தொகை குறித்த கணக்கெடுப்பு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னும் கொஞ்ச நாளில் விடுபட்டவர் களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நம் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே விடுபட்ட மகளிருக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும், இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம்.பி.கூறினார்.!

நிகழ்ச்சின்போது எப்போதும்வென்றானைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்து திவ்யா, கனிமொழி எம்.பி-யைச் சந்தித்து, “தனது தந்தை வைரமுத்தும் தாய் சின்னமணியும் இறந்துவிட்டனர் என்றும். நானும் எனது சகோதரர் முத்துக்காட்டுராஜாவும் தாத்தா, பாட்டி பராமரிப்பில் உள்ளோம். நாங்கள் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பும், 8-ம் வகுப்பும் படித்து வருகிறோம். எங்களது தாத்தாவுக்கு வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. பாட்டி தான் காட்டு வேலைக்குச் சென்று எங்களை பரிமறித்து பாதுகாத்து வருகிறார். எனவே, தொடர்ந்து கல்வி பயில உதவ வேண்டும்” என்று கூறினார். !

உடனடியாக கனிமொழி கருணாநிதி, எம்.பி. கண்டிப்பாக உங்களது படிப்புக்கு உதவி செய்யப்படும், என்று உறுதியளித்தவர், நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று அரவணைப்புடன் கூறினார். இச்சம்பவம் கூட்டத்தினர் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.!


முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டு அரசின் பயனுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக மக்களிடத்தில் எடுத்து கூறினார்கள்.


111 views0 comments

コメント


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page