![](https://static.wixstatic.com/media/569adb_a0f3e9c43b1646a98a3e59089055f4d2~mv2.jpg/v1/fill/w_980,h_632,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/569adb_a0f3e9c43b1646a98a3e59089055f4d2~mv2.jpg)
தமிழ்நாட்டிலுள்ள கல்குவாரிகளை அரசே முழுமையாக எடுத்து நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து சட்டவிரோத கல்குவார்கள்
எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், ந. சண்முகம்,
சட்ட விழிப்புணர்வு தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்க நிர்வாகிஇரா. அணிசதீசுகுமார்,
கனிமவளக்கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி கம்பூர்.செல்வராஜ், ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.!
வரும் 17-10-2024 வியாழகிழமை, காலை 10.00 மணிக்கு, ஈரோடு மாவட்டம் கோபி கோட்டம்/ நம்பியூர் வட்டம்/ புளியம்பட்டி அருகே உள்ள காராபாடியில், 23 ஏக்கர் பரப்பளவு உள்ள மதுரை மேலூரை சேர்ந்த மீனாட்சி கிரானைட் குவாரிகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றது போல் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும் பங்கேற்று பொதுமக்கள் கருத்தை கேட்டு அறிய வேண்டும்.!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20' 2024-ல் நடந்த பெருந்துறை சிங்காநல்லூர்/பாண்டியம்பாளையம் கிரானைட் குவாரி, 2022/2023/2024-ல் கோபி வட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் கிராமத்தில், 2024 ஆகஸ்ட் '23 நம்பியூர் எலத்தூரில் நடந்த கல்குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டங்களில், திருச்செங்கோடு கோக்கலை கல்குவாரி கருத்துக் கேட்ப்பு கூட்டங்களில், கரூர்- கோவை -திண்டுக்கல் -- ஈரோடு - மதுரை- விருதுநகர் -நெல்லை- திருப்பூர் என பல மாவட்டங்களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில், பல்வேறு மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததும், பல்வேறு விவரங்கள் மறைப்பும் செய்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.!
ஆதாரபூர்வமாக இது தொடர்பான ஆவணங்களை கொடுத்த நிலையில்,
இந்த மோசடிகளை எல்லாம் மறைத்து, கோடி கணக்கில் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக குவாரிகளுக்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுமம் சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது கண்டறியப்பட்டு, மிகப்பெரிய மக்கள் போராட்டம் கடந்த 2024, செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது.!
SEIAA எனப்படும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவினர் போராட்டக் குழுவினரை நேரில் அழைத்து, தாங்கள் செய்தது தவறு என்றும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான அனுமதிகளை- கருத்து கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலித்து விரைவில் ரத்து செய்வோம் என உறுதி கொடுத்துள்ள நிலையில், இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.!
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் தொடர் செயல்பட்டால் கடந்த 2021-ல் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலிருந்த 64 கல்குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று உயர் நீதிமன்றமே அனைத்தையும் மூடியும், தற்போது கோவை மாவட்டத்தில் தடாகம் வெள்ளியங்கிரி மலைப்பகுதி பகுதிகளில் சட்ட விரோத செம்மண் கொள்ளை மீது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நீதிபதிகளை அனுப்பி உயர் நீதிமன்றம் ஆய்வு செய்து வரும் நிலையில், மேலும் பல இடங்களில்
தவறுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.!
இன்றைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 27-03-2021 அன்று எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் கொள்ளையடிப்பதற்காகவே கல்குவாரிகள் திறக்கப்பட்டு வருகிறது என்று கரூரில் குற்றம் சாட்டிய நிலையில், இனிமேல் கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என திமுக தேர்தல் அறிக்கையில் 200 வது வாக்குறுதியாக தெரிவித்துள்ள நிலையில் கிரானைட் குவாரிக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.!
அனைத்து மாவட்டங்களிலும், கடந்த பல ஆண்டுகளாக
மிகப்பெரும் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதித்தும் நடைபெற்று வரும்
கிரானைட் குவாரி உரிமையாளர்களால், காரப்பாடி கிராமத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அவல நிலையே தற்போது உருவாகி உள்ளது.!
சென்ற மாதம், ஈரோடு மாவட்ட பெருந்துறை வட்டம் பாண்டியம்பாளையம் சிங்காநல்லூர் கிராமத்தில் அமைந்த வேலுமணி கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில்/ கோபி கவுண்டம்பாளையம் கிராமத்தில் மனோகரன் கல்குவாரி/ நம்பியூர் எலத்தூர் கல்குவாரியில் அரசுத்துறை அதிகாரிகள் முன்பாகவே, குறிப்பாக பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (DEE) சாமிநாதன் துணையுடன் குவாரி உரிமையாளர்களும் அவர்களால் அழைத்து வரப்பட்ட அடியாட்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் களுக்கு நேரடியாகவே கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயற்சித்து, அச்சுறுத்தினர்.!
தற்போது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் அதன் மீது விசாரணை நடந்து வருகிறது.!
காராப்பாடியில் , உண்மையைச் சொல்வதால், இதுபோன்ற நிலை பங்கேற்கும் செயல்பாட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.!
எனவே காரப்பாடி கிரானைட் குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு நடக்கும் உண்மையை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிய வேண்டும், சட்ட விரோத வெடிமருந்துகள் நடமாட்டத்தின் மீதும், சட்ட விரோத கல்குவாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்கள்..
புலியூர் ஜெ.ராகுல்.....
Comments